சண்முக பாண்டியன் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு
சென்னை,நடிகர் சண்முக பாண்டியன் இயக்குநர் மணிசேயோன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அறிப்விப்பை தயாரிப்பு நிறுவனமான கேப்ட
நடிகர் சண்முக பாண்டியன் இயக்குநர் மணிசேயோன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அறிப்விப்பை தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து ‘மதுரை வீரன், படைத்தலைவன், கொம்புசீவி’ என்ற படங்களில் நடித்தார்.
தற்போது திரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாணவேடிக்கை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன், இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


