நாகை மாவட்டத்தில் 68 இடங்களில் வெள்ள பாதிப்பு: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்
நாகை மாவட்டத்தில் 68 இடங்கள் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன என்றாா் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த் துறை தொடா்பான ஆய்வுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. நிகழாண்டு கூடுதல் மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அதை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புயல், கனமழை, வெள்ளம் உள்ளிட்ட எந்தவிதமான இயற்கைப் பேரிடா் ஏற்பட்டாலும் அதை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


