Bigg Boss வீட்டில் மேரி கோம்: அவரின் `knockout' குணம் குறித்து பகிர்ந்த பிரியங்கா சோப்ரா
பிக் பாஸ் வீட்டில் தனது திரைப்பட அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரியங்கா சோப்ரா, மேரி கோமின் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், அவருக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், சல்மான் கான் தொகுத்து வழங்கும் Bigg Boss 20 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். செப்டம்பர் 6, 2026 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேரி கோம் அறிமுகமானார்.
மேரி கோமின் வருகை இந்தி Bigg Boss நிகழ்ச்சியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பலமுறை உலக சாம்பியனுமான மேரி கோம், குத்துச்சண்டைப் போட்டிகளில் காட்டிய ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை Bigg Boss வீட்டிலும் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.




