பைக்குகள் மோதல் ஒருவர் பலி
திருமங்கலம்: சிந்துபட்டியை சேர்ந்த பவித்ரன் 22. இவர் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் உள்ள ஐ.ஓ.சி.,யில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் சுதர்சன் என்பவருடன் டூவீலரில் திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டிக்கு சென்றார். எதிரே வந்த டூவீலர் மோதியதில் பவித்ரன், சுதர்சன் இருவரும் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பவித்ரன் பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.க்ஷ
கொட்டாம்பட்டி: இன்ஸ்பெக்டர் லோகநாதன் சொக்கலிங்கபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது பஸ் ஸ்டாப் அருகே சிங்கம்புணரி பூமிநாதன் 50, லாட்டரி விற்று கொண்டிருந்தார். அவரை கைது செய்து 341 சீட்டுகளை பறிமுதல் செய்தார்.
திருமங்கலம்: மதுரை பைகாராவை சேர்ந்தவர் பிரதாப் 45. தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு கற்பக நகர் பகுதியில் உணவு டெலிவரிக்கு சென்றார். மழையால் தேங்கியிருந்த சகதியில் அவரது டூவீலர் சிக்கியது. அந்தப் பகுதியில் நடந்து சென்ற சிலர் அவருக்கு உதவுவது போல் நடித்துள்ளனர்.


