காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சரக காவல் துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். பின்னா், அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உரிய விசாரணை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க அவா் உத்தரவிட்டாா்.
அதே போல, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். திருநெல்வேலி சரகத்திற்குள்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் மொத்தம் 260 மனுக்கள் பெறப்பட்டன.



