நேபாளம்: பாலம் இல்லை… பாதையும் இல்லை… ஆபத்தான பயணம் ஜிப்லைனே ஒரே நம்பிக்கை!
Bridges Washed Away, Zipline Keeps Nepal's Devighat Connected
வெள்ளத்தில் சேதமடைந்த ஒரு வீட்டின் எஞ்சிய இரும்புக் கம்பியில் ஜிப்லைனின் ஒரு முனையும், மறுபுறம் உயிர் தப்பிய ஆலமரத்தில் மற்றொரு முனையும் கட்டப்பட்டுள்ளது.
பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 250 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து உணவு, உடைமைகளை எடுத்துச் செல்லும் நேபாள மக்களின் போராட்டம், பாலம் போன இடத்தில் உயிர்நாடியான ஜிப்லைன்!
நேபாளத்தின் தேவிகாட்டில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளம், அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. சீற்றத்துடன் பாய்ந்த திரிசூலி ஆறு, வீடுகளையும் பாலங்களையும் அடித்துச் சென்ற நிலையில், ஆற்றின் இரு கரைகளும் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்பட்டுள்ளன.


