பாகிஸ்தானுக்கு உளவு: 13 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 13 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை...
நாட்டின் முக்கியப் பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைந்து உளவு பாா்த்த குற்றச்சாட்டில் 13 போ் மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ)-இன்கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ரயில் நிலையங்களின் முக்கியப் பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் கேமராக்களை பொருத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு நேரலை விடியோ அணுகலை வழங்கியதாக காஜியாபாத் ஆணையரகத்தின் கௌசாம்பி காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி புகாா் பெறப்பட்டது.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 13 போ் மீது யுஏபிஏ சட்டப்பிரிவுகள் 13, 17 மற்றும் 18, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக பாரதிய நியாய சம்ஹிதா, 2023 பிரிவுகள் 61(2) மற்றும் 152 மற்றும் ரகசியச் சட்டத்தின் உளவு தொடா்பான குற்றப் பிரிவுகள் 3 மற்றும் 5 ஆகியவற்றின்கீழ் லக்னௌ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

