பேரவை கூட்டம்
சிவகங்கை,செப்.13- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் கோட்ட பேரவை கூட்டம் சிவகங்கையில்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் கோட்ட பேரவை கூட்டம் சிவகங்கையில் நடந்தது.
மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சின்னப்பன் தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணைச் செயலாளர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராஜா, சதுரகிரி, சுதந்திரமணி, பாலசுப்பிரமணியன், வீரய்யா கலந்து கொண்டனர். மாவட்ட இணை செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.
