ஆழ்துளை கிணறு, சாலை அமைக்க அ.தி.மு.க., கவுன்சிலர் கமிஷனரிடம் மனு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் 23வது வார்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும் மற்றும் சேதமடைந்த சாலைகளை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க கோரி அப்பகுதி அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா சம்பத், மாநகராட்சி கமிஷனர் வினோத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டில் யதோக்தகாரி வடக்கு மாட வீதி பள்ளி வளாகம் அருகில் உள்ள சிறுமின்விசை குடிநீர் தொட்டியில் வரும் நீர் அசுத்தமாக்வும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்து, மாசடைந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர்.

