பிரான்ஸ்: ரூ. 100 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் திருட்டு
பாரிஸ்,பிரான்சில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 100 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. 4 ஓவியங்கள்பிரான்ஸ் நாட்டின் 1841ம் ஆண்டு முதல் 1919
பிரான்சில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 100 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் 1841ம் ஆண்டு முதல் 1919ம் ஆண்டு வரை வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியர் பியர் அகஸ்ட் ரென்வார். இவர் வரைந்த உலகப்புகழ்பெற்ற 4 ஓவியங்கள் கார்க்னெஸ் சுர் மெர் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 4 ஓவியங்களின் மொத்த மதிப்பு 9 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய்) ஆகும்.
இந்நிலையில், அருங்காட்சியகத்தில் இருந்த 4 ஓவியங்களும் இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த 2 பேர் கொண்ட 4 ஓவியங்களையும் திருடியுள்ளனர்.

