அரசு பள்ளிக்கு ரூ.18 லட்சத்தில் கழிவறைகள் அமைக்கும் பணி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்-கப்பள்ளியில், 50 மாணவ, மாணவியர் படிக்கின்-றனர். போதிய கழிவறை வசதி இல்லாததால், பள்ளி தலைமையாசிரியை ஈஸ்வரி பாய், டைட்டன் இன்ஜினியரிங் ஆட்டோமேஷன் (டீல்) நிறுவனத்தை தொடர்பு கொண்டார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் உரிய அனுமதி பெற்று, டீல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 18 லட்சம் ரூபாய் கழிவறை கட்ட ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக்கல்வி) நரசிம்மன், 'டீல்' பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். வட்டார கல்வி அலுவலர் ராஜூ, வட்டார வள மைய ஆசிரியை சுபா, துணை வட்-டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரபா, பள்ளி மேலாண்மை குழு தலைவி தீபா, 'டீல்' நிறுவன மேலாளர்கள் ஹரிஹரன், செந்தில்குமார், தணி-கைவேல், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்-றனர். ஏற்பாடுகளை, 'டீல்' பெருநிறுவன சமூக பொறுப்-புணர்வு திட்ட அதிகாரி பிரபு, கட்டட பொறியாளர் மூர்த்தி செய்திருந்தனர்.