பசிபிக் பெருங்கடலில் ஏலியன்? உடலை விட 20 மடங்கு நீள கை! 10,000 அடியில் விஞ்ஞானிகள் ஷாக்!
செய்தியாளர் - கார்த்திகேயன்செவ்வாய் கிரகம், நிலவின் மேற்பரப்பு, சூரியன் போன்ற விண்வெளி கிரகங்களையும், துணை கோள்களையும், நட்சத்திரங்களையும், விஞ்ஞானிகள் தொடர்ச்ச
கலிபோர்னியா கடற்கரைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில், 10,000 அடி ஆழத்தில் பிக்ஃபிக் ஸ்குவிட் உயிருடன் காணப்பட்டு விஞ்ஞானிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 4.1 அடி நீள உடலுடன், அதைவிட 20 மடங்கு நீளமான கை, உணர் கொம்புகள் கொண்ட இந்த உயிரினம், 20,000 அடி ஆழத்திலும் வாழும் திறன் உடையதாக MBARI விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய் கிரகம், நிலவின் மேற்பரப்பு, சூரியன் போன்ற விண்வெளி கிரகங்களையும், துணை கோள்களையும், நட்சத்திரங்களையும், விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால், விண்வெளியில் கண்டுபிடித்ததை காட்டிலும், நமது பூமியிலேயே இருக்கும் கடலை முழுமையாக ஆராய்ந்தது கிடையாது. இதுவரை, 0.0001 சதவீதம் மட்டுமே, நாம் கடலை ஆய்வு செய்திருக்கிறோம். கடலின் ஆழத்திற்கு செல்ல செல்ல அழுத்தம் மிக அதிகமாக இருப்பதால், மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல்களால் கூட அங்கு செல்ல முடியாது.
சூரிய ஒளி மொத்தமாக மறைந்து, உறைபனி அளவு குளிரும் நிலவுவதால், மனிதர்களால் தீவிர ஆராய்ச்சிகளை நடத்த முடிவதில்லை. எனவே, கடலுக்கு அடியில் உள்ள 7 லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்கள் இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாமலேயே உள்ளது. இவ்வளவு மர்மங்கள் நிறைந்த கடலில், ஏலியன் மாதிரியான உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கலிபோர்னியா கடற்கரைக்கு அருகில், பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி ஆழத்தில், பிக்ஃபிக் ஸ்குவிட் என்ற உயிரினம், உயிருடன் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

