1 பெண்கள் பாதுகாப்புக்கு ‘சிங்கப்பெண் பிங்க் பூத்’
கோவை: தமிழக அரசு சார்பில், சிங்கப்பெண் சிறப்பு படை செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல், தொல்லை, பின்தொடர்தல், இணையவழி தொல்லை உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து சிங்கப்பெண் படை குழுவினரை அணுகி தெரிவிக்க, ‘பிங்க் பூத்’ துவங்கப்பட்டுள்ளது.
இங்கு பெண் போலீசாரை சந்தித்து புகார் தெரிவிக்கலாம். நேரில் பேச தயங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் தகவல் தெரிவிக்கலாம். அவசர காலங்களில், காவலர் உதவி செயலி மூலம் எஸ்.ஓ.எஸ்.,வசதி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள சிங்கப்பெண் ரோந்து குழுவை தொடர்பு கொள்ளவும், வசதி செய்யப்பட்டுள்ளது.
‘கல்லுாரி மாணவியர், பெண்கள் அதிகம் கூடும் ஹோப் காலேஜ் சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் ஆகிய இரு இடங்களில் முதல்கட்டமாக பிங்க் பூத் செயல்படுகிறது. இந்த பூத்தினுள் சிங்கப்பெண் போலீஸ் இருப்பார்’ என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
