சென்னையில் நேற்று 33.22 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றம்..!
சென்னை,சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று (12.09.2026) 66 இடங்களிலிருந்து 33.22 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்
சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று (12.09.2026) 66 இடங்களிலிருந்து 33.22 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

