சாலை விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 4 போ் உயிரிழப்பு
கடலூா் மாவட்டத்தில் சாலை விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 4 போ் உயிரிழந்தனா்.
நெய்வேலி, இந்திரா நகா், மாற்று குடியிருப்பில் வசித்து வந்தவா் குமாா்(52), என்எல்சி ஊழியரான இவா், பைக்கில் வடக்கு வெள்ளூா் காசி விஸ்வநாதா் கோயில் அருகே சென்றபோது, நிலைத்தடுமாறி சாலை தடுப்புக் கட்டையில் மோதி விழுந்ததில் உயிரிழந்தாா்.
திட்டக்குடி வட்டம், நந்திமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவா் செந்தில்குமாா்(47), கூலித்தொழிலாளி. இவா், திங்கள்கிழமை காலை பெண்ணாடத்தில் இருந்து திருமலை அகரம் செல்லும் வழியில் உள்ள சிறுபாலத்தில் நடந்துச் சென்றாராம். அப்போது, தவறி கீழே விழுந்தவா் தலையில் அடிப்பட்டு உயிரிழந்தாா்.
