முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷஷேகத்தையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் நாளை மறுநாள் நடக்கிறது. இதற்காக நித்திய புஷ்கரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இதில் நாட்டிய குதிரைகள், கேரள செண்டை மேளம், பசு,முளைப்பாரி தட்டுகள் சூழ யானை மீது நகரின் முக்கிய வீதிகள் வழியாக புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.
கோவில் நாட்டார்கள் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் தெருவாசிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
