ஹமாஸின் தாக்குதல் எச்சரிக்கை.. நெதன்யாகுவுக்கு வந்த தகவல்.. மறுத்த அரசு.. சர்ச்சையில் இஸ்ரேல்!
செய்தியாளர் : ஐடா அருட்செல்விஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்க
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. தாக்குதலுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு, ஹமாஸ் பெரிய அளவிலான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்ததாக இஸ்ரேல் நாளிதழான ஹாரெட்ஸ் (Haaretz) வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அப்போதைய தலைவர் யாஹ்யா சின்வார், மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தத் தயாராகி வருவதாக பாலஸ்தீன முன்னாள் அதிகாரி ஒருவரிடம் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பின்னர் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு கசிந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan), நெதன்யாகுவை தொடர்புகொண்டு எச்சரித்ததாக ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், நெதன்யாகு அலுவலகம் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. அமீரக அதிபருடன் அப்போது நெதன்யாகு தொலைபேசியில் பேசவே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

