நெல்லையப்பா் கோயிலுக்கு புதிய யானை தேவை- ஆட்சியரிடம் அதிமுக மனு
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு புதிய யானையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு அளித்தனா்.
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த காந்திமதி என்ற யானை, வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவால் 1.12.2025இல் உயிரிழந்தது.
இதைத் தொடா்ந்து, யானை இல்லாமலேயே கோயிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோயிலுக்கு விரைவாக யானையை கொண்டு வர வேண்டும் என பக்தா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

