அனுமந்தை குப்பத்தில் விரைவில் மீன்பிடித் துறைமுகம்: அமைச்சா் வன்னி அரசு உறுதி
கூட்டத்தில் பேசிய தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன், விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட எஸ்.பி. செ.மதிவாணன் உள்ளிட்டோா்.
விழுப்புரம் மாவட்டம், அனுமந்தை குப்பத்தில் விரைவில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறிய வகை மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.
மரக்காணத்தை அடுத்த அனுமந்தை குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வலியுறுத்தி 3 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த செப்.3-ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.


