“என்னை காதல் கதையில் நடிக்க வைக்க யாருக்கும் தோன்றவில்லை!” - டாப்ஸி பன்னு
மும்பை,தொடர்ந்து ஆக்ஷன், திரில்லர் மற்றும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வரும் டாப்ஸி பன்னு, தற்போது ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க விருப்பம்
தொடர்ந்து ஆக்ஷன், திரில்லர் மற்றும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வரும் டாப்ஸி பன்னு, தற்போது ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழில் வெளிவந்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் டாப்ஸி பன்னு. அதனை தொடர்ந்து 'ஆரம்பம்', 'காஞ்சனா 2', 'வை ராஜா வை', 'கேம் ஓவர்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் நேற்று 'காந்தாரி' என்ற திரில்லர் படம் வெளியாகி உள்ளது. கற்பனையான ஜெய்புரா என்ற நகரத்தை பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், பானி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவாஷிஷ் மக்கிஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

