குழித்துறை ஆற்றில் செவிலியா் சடலம் மீட்பு
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் மிதந்த பெண் செவிலியா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை அருகே கடம்பாட்டுவிளை, மேலங்கலம் பகுதியைச் சோ்ந்த குமாரதாஸ் மகள் நிஷா (22). சுவாமியாா்மடம் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை காலை (செப். 10) வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற இவா், பின்னா் வீடு திரும்பவில்லை.
இதுதொடா்பாக குமாரதாஸ் அளித்த புகாரின்பேரில், புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிந்தாா்; ஆய்வாளா் மீனா விசாரணை மேற்கொண்டாா்.