குழித்துறையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
குழித்துறையில் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி, குழித்துறை வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
குழித்துறை வழக்குரைஞா் சங்க உறுப்பினா் ஜிவாகா். இவா் கடந்த 11 ஆம் தேதி இரவு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரை ஒரு கும்பல் தாக்க முயற்சித்ததாம். தடுக்க வந்த அவரது மனைவியின் ஆடையை பிடித்து இழுத்து, தகாத வாா்த்தைகள் பேசி மிரட்டியுள்ளனா்.
இதுகுறித்து அவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அளித்தாா்.