ரயில் பயணியரிடம் மது விற்றவர் கைது
தரமணி: தரமணியில் ரயில் பயணியரை குறிவைத்து, மது விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தரமணி ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மேல், ஒரு நபர் ரயில் பயணியரை குறிவைத்து, மது பாட்டில் விற்று கொண்டிருந்தார். இதுகுறித்த தகவல்படி, தரமணி போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், துரைப்பாக்கம், எழில் நகரை சேர்ந்த புருஷோத்தமன், 30, ரயிலில் இறங்கி வரும் பயணியரிடம் விற்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்