காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்? - வேல்முருகன்
சென்னை,காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்
காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பெங்களூருக்குக் காவிரி மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 2,825 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. அதே நகரில் நாளொன்றுக்கு சுமார் 2,580 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. ஆனால், பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கீழ் செயல்படும் 37 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தற்போதைய சுத்திகரிப்புத் திறன் 1,364.5 மில்லியன் லிட்டர் மட்டுமே. இதனால் நாளொன்றுக்கு 1,215.5 மில்லியன் லிட்டர் அளவுக்குச் சுத்திகரிப்புத் திறன் பற்றாக்குறை இருப்பது கர்நாடக அரசின் அதிகாரிகளாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.


