நகராட்சி தோண்டிய குழி முன்அமர்ந்து கவுன்சிலர் தர்ணா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் குடிநீர் குழாயை சரி செய்ய தோண்டிய குழி முன் அமர்ந்து கவுன்சிலர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
ராமநாதபுரம் நகராட்சி செட்டியார் தெரு பகுதியில் குடிநீர் குழாயை சீரமைப்பதற்காக சமீபத்தில் குழி தோண்டப்பட்டது. அப்பகுதியில் பள்ளி மற்றும் கோயில் உள்ளதால் பொதுமக்கள், மாணவர்கள் செல்வதற்கு அச்சமடைகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 12 வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் கமலக்கண்ணன் குழி முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அவர் கூறுகையில், நகராட்சி நிர்வாகம் த.வெ.க., அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. வாகனங்கள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில் தோண்டிய குழியை மூடாமல் விட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் செல்வதற்கு அச்சமடைகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ––

