பல்கலையில் புதிய தொழில்முனைவோர் மையம் துவக்கம் 3 மணி நேரத்தில் ரூ.96,000 ஈட்டி அசத்திய மாணவர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்பினை ஊக்குவிக்கும் வகையில், பல்கலைக்கழக தொழில்முனைவோர் மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
மும்பை ஐ.ஐ.டி.,யின் தொழில் முனைவோர் மையம் நடத்தும் தேசிய தொழில்முனைவோர் சவால் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை வெறும் வேலை தேடுபவர்களாக அல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோராக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் இந்த ஸ்டார்ட்அப் கிளப், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தொடங்குவோம் வளர்வோம் என்ற கருப்பொருளில் 8 மணி நேர ஹேக்கத்தான் போட்டியை நடத்தின.
