நாட்டை விட்டு வெளியேறும் குடியேறிகளுக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி - சுவீடன் அரசு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம்,சுவீடனில் குடியேறிய வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பினால், அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.புதிய திட
சுவீடனில் குடியேறிய வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பினால், அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஒரு காலத்தில் அகதிகளையும் புலம் பெயர்ந்தவர்களையும் வரவேற்ற சுவீடன் நாடு, தற்போது தனது குடியேற்றக் கொள்கையில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. நடப்பு செப்டம்பர் மாத பொதுத்தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், அங்குள்ள ஆளும் கூட்டணி அரசு புதிய அதிரடித் திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.
இதன்படி, ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே இருந்து வந்து சுவீடனில் குடியேறிய வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பினால், அவர்களுக்கு சுமார் ரூ.35 லட்சம்(3,50,000 சுவீடிஷ் குரோனா) நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்காக சுமார் ரூ.1,300 கோடி(1.3 பில்லியன் குரோனா) நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

