போதை ஒழிப்பு விழிப்புணர்வு: 48 நிமிடத்தில் 12 கி.மீ ஸ்கேட்டிங் செய்து 6 வயது தஞ்சை சிறுமி சாதனை
தஞ்சாவூர்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தஞ்சாவூரை சேர்ந்த 6 வயது சிறுமி 48 நிமிடங்களில் 12 கிலோமீ
இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தஞ்சாவூரை சேர்ந்த 6 வயது சிறுமி 48 நிமிடங்களில் 12 கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்தவர் ஹர்ஷினி (வயது 6). இந்த சிறுமிக்கு சிறு வயது முதலே ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. இதற்காக அவர் முறையான பயிற்சியும் பெற்று வந்தார். இந்த நிலையில், தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பெருகி வரும் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுமி ஹர்ஷினி முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி ஸ்கேட்டிங் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுமி ஹர்ஷினி கலந்து கொண்டு, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக ஸ்கேட்டிங் செய்தார்.

