முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்வு
திருச்சி, முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி கடல் போல் காட்சி அளிக்கிறது.காவிரியில் தண்ணீர் திறப்புமேட்டூர் அணையில் இ
முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி கடல் போல் காட்சி அளிக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகம் தமிழகத்துக்கு சிறிதளவு தண்ணீர் திறந்துவிட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு முதல்-அமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து விட்டார். முதல் கட்டமாக வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 3-ந்தேதி மாயனூர் கதவணைக்கு வந்தது.



