பாஜக பிரமுகர் மீது பெண் அதிரடி புகார்; அதிர்ச்சியில் கமலாலயம்!
தமிழக பாஜகவில் மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் தஞ்சையை சேர்ந்த கருப்பு முருகானந்தம். கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர். இவர் மீது தற்போது திவ்யமான பெண்மணி ஒருவர் தமிழக பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு ஒரு புகாரை கொடுத்துள்ளார். அதிலுள்ள தகவல்களை அறிந்து தமிழக பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தகவலறிந்து விசாரித்தபோது, " திருச்சியைச் சேர்ந்த பெண்மணி அவர். அவரிடமிருந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு கருப்பு முருகானந்தத்திற்கு எதிராக புகார் வந்துள்ளது. அதில், டெல்லி, சென்னை, கொடைக்கானல் என பல்வேறு இடங்களுக்கு என்னை அழைத்து சென்றிருக்கிறார். கல்யாணம் செய்து கொள்வதாகவும் எனக்கு வாக்கு கொடுத்தார். அதை நம்பினேன். என் சொத்துக்களையும் அபகரிக்க முயற்சிக்கிறார். இப்போது என்னை கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுகிறார். இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருக்கிறார் அந்த பெண்மணி. இந்த புகார், தற்போது பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது " என்கிறார்கள் விபரம் அறிந்த தமிழக பாஜக நிர்வாகிகள்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




