டூவீலர்கள் மோதி 3 மாணவிகள் காயம்
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அரசு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவிகள் நேற்று மாலை பள்ளி முடிந்து செந்துறை ரோட்டோரம் நடந்து சென்றனர்.
அப்போது அவ்வழியே 2 டூவீலர்களில் 4 பேர் போட்டியிட்டு அதிவேகமாக வந்தனர். டூவீலர்கள் அடுத்தடுத்து 3 மாணவிகள் மோதியது. அப்பகுதியினர் ஒரு டூவீலரில் வந்த இருவரை பிடித்து வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த 3 மாணவிகளையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

