நடைபயிற்சியில் ஈடுபட்டவர் கார் மோதிய விபத்தில் படுகாயம்
பொதட்டூர்பேட்டை: நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர் மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார்.
பொதட்டூர்பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்தவர் விஜயன், 57. இவர், நேற்று காலை பள்ளிப்பட்டு நெடுஞ்சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற கார், விஜயன் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த விஜயனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக, திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.