`நான் அவனில்லை' - ஓல்டு மாங்க் ரம், விஸ்கி என விற்பனை செய்யப்படுவது ரம், விஸ்கி அல்ல! - முழு தகவல்!
The Maharashtra Food and Drug Administration has stated that the liquor sold under the 'Old Monk' brand is not rum and has banned its sale.
ஓல்டு மாங்க் என்ற பிராண்டில் விற்பனை செய்யப்படும் மதுபானம் ரம் கிடையாது என்று மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தெரிவித்து அதன் விற்பனைக்கு தடை விதித்து இருக்கிறது.
மது பிரியர்களுக்கு ஓல்டு மாங்க் ரம் என்றால் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த ரம் உண்மையில் ரம் இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.
மகாராஷ்டிராவில் ஓல்ட் மாங்க்' (Old Monk) மதுபானத்தை ரம் என்ற பெயரில் விற்க முடியாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான 'ரம்' வகைகள் உண்மையில் 'ரம்' இல்லை என்பதை உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த நடவடிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.


