ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை: அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? - வேல்முருகன்
சென்னை,ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் வெளியூர்களுக்குப் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை இயல்பாகவே பன்மடங்கு அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு விரைவாக முடிந்துவிடுவதால், கணிசமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இக்காலகட்டங்களில் இணையவழி முன்பதிவுத் தளங்களில் பேருந்துக் கட்டணங்கள் வழக்கத்தை விடப் பெருமளவில் உயர்த்தப்படுவதாகப் பயணிகள் முன்வைக்கும் தொடர் புகார்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன. தேவை அதிகரிக்கும் போது கட்டணம் உயர்த்தப்படுவது இயல்பு எனக் கூறப்பட்டாலும், இது சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பயணச் செலவைக் கடுமையாகப் பாதிக்கிறது.


