சிரித்தபடி டாட்டா... பறக்கும் முத்தம்... அடுத்த நொடி ஆற்றில் குதித்த இளம்பெண்
ஸ்ரீநகர்,ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண் பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண் பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
பாயல் நேற்று உள்ளூரில் நடந்த திருவிழாவிற்கு சென்றிருந்தார். திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவரை சந்திக்க போவதாகவும் போனில் கூறினார். ஆனால், அங்கு டாக்டர் இல்லாததால் அவர் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, கிராமத்தை சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிளில் அவர் பின்னால் அமர்ந்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில் திடீரென பாலத்தின் விளிம்பிற்கு ஓடிய பாயல், ஆற்றில் குதிக்க முயன்றார். பதறிப்போன உறவினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுக்க எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


