அறச்சந்திப்பு கூட்டம்
சிதம்பரம்: தில்லை ஈரடிப் பேரவை சார்பில் அறச்சந்திப்புக் கூட்டம் நடந்தது.
சிதம்பரம் சரசு மெட்ரிக் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு பள்ளி தாளாளர் கவிதா முருகன் தலைமை தாங்கினார். ரவிசங்கர் வரவேற்றார். மோகன் துவக்க உரையாற்றினார். பட்டிமன்ற பேச்சாளர் கீர்த்தனா, ' குறள் நயம்' என்றத் தலைப்பில் பேசினார்.
பேரவை செயலாளர் பரந்தாமன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் சிவக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நந்தகுமார் நன்றி கூறினார்.
