பாளை. மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள பொம்மையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முனியசாமி(58). இவா் அப்பகுதியில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் ஆயுள்தண்டனைப் பெற்று 2021ஆம் ஆண்டு முதல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 5 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.


