நாக்பூர் தம்ம சக்கர பரிவர்தன விழாவிற்கு செல்ல மானியம் பவுத்தர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு
கள்ளக்குறிச்சி: நாக்பூர் தம்ம சக்கர பரிவர்த்தன விழாவிற்குச் செல்லும் பவுத்தர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்த பவுத்தர்கள் நாக்பூர் தீக் ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தர்ம சக்கர பரிவர்தன விழாவில் பங்கேற்று திரும்ப, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நடப்பாண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பவுத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்ப படிவத்தினை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

