லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்: 11-ம் நிலை வீராங்கனையை வீழ்த்திய அனாஹத் சிங்... காலிறுதிக்கு முன்னேற்றம்
லண்டன்,லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடரில் இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அனாஹத் சிங் அபாரம்லண்டனில் நடைபெற்று வரும் லண்டன் ஸ்குவ
லண்டனில் நடைபெற்று வரும் லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடரில் பெண்கள் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள அனாஹத் சிங், நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் நெலே கிலீஸை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய அனாஹத் சிங், கிலீஸை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
தற்போதைய உலக ஜூனியர் சாம்பியனான அனாஹத் சிங், கடந்த ஆண்டு லண்டன் கிளாசிக் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நெலே கிலீஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதிப் போட்டியில் 2024-ம் ஆண்டு லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் சாம்பியனான சிவசங்கரி சுப்ரமணியத்தை எதிர்கொள்கிறார்.
