காஞ்சி சங்கராசாரியரிடம் ஆசி பெற்றாா்: தமிழிசை செளந்தர்ராஜன்
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்ற முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தர்ராஜன்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் தங்கி இருந்து சாதுா் மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகின்றனா்.


