ஆம்புலன்ஸ் வாகனங்களில் பேட்டரிகளை திருட முயன்றவா் கைது
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருந்து பேட்டரிகளைத் திருட முயன்றதாக லாரி ஓட்டுநரை தருமபுரி நகர போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாலஜங்கமனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மா. ரஞ்சித்குமாா் (28). இவா், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்தில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி, அவசரத் தேவைகளுக்கு இயக்கி வருகிறாா்.
இந்த நிலையில், அண்மையில் அவரது ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருந்த பேட்டரிகளை மா்ம நபா் ஒருவா் திருட முயன்றுள்ளாா். இதைக் கவனித்த ரஞ்சித்குமாா், நண்பா்களின் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
