தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சிறார்கள்; புனே போலீஸ் மீது வழக்கு; மனித உரிமை கமிஷன் உத்தரவு
The Human Rights Commission has ordered the registration of a case against 14 police personnel, including the Police Commissioner, in connection with an incident in Pune where eight boys were beaten, kicked, and paraded through the streets.
புனேயில் 8 சிறுவர்களை அடித்து உதைத்து தெருவில் ஊர்வலமகாக அழைத்துச் சென்றது தொடர்பாக போலீஸ் கமிஷனர் உட்பட 14 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
புனேயில் கொலை வழக்கு ஒன்றில் போலீஸாரிடம் சரணடைந்த சிறார்கள் 8 பேரை, போலீஸ் நிலையத்தில் ஐந்து நாட்கள் சட்டவிரோத வைத்திருந்து அடித்து உதைத்துள்ளனர்.
அதோடு அந்தச் சிறார்களை பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்களது குடும்பத்தினர் ஒருவர் இதை எதிர்த்ததையடுத்து, அந்தச் சிறார்கள் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.


