வணிகவளாகம் திட்டத்தை ரத்து செய்யுங்க!
வால்பாறை: வால்பாறை நகர தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ரவீந்தரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், எஸ்டேட் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
வால்பாறை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்த வேண்டும். புதுமார்க்கெட் வியாபாரிகளின் நலன் கருதி வணிகவளாகம் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவை உள்ளிட்ட தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அவைத்தலைவர் சிவா, பொதுக்குழு உறுப்பினர் சாமி, துணை செயலாளர் ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.