அதிக வருவாய் சென்னை சென்ட்ரலுக்கு மூன்றாவது இடம்
சென்னை: தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி அளித்த பேட்டி:
ரயில்வேயில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களுடன், நவீன கட்டமைப்புகளை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதனால், ரயில்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த நிதி ஆண்டில், பயணியர் பிரிவில், நாட்டில் அதிகமாக வருவாய் ஈட்டும் முதல், 10 ரயில் நிலையங்களில், சென்னை சென்ட்ரல் மூன்றாவது இடத்தில் உள்ளது.


