வரலாறு படித்து வரலாறு படைத்த பெண் மருத்துவர் - இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்
பெண் என்பதற்காக அறிவியல் படிப்பு மறுக்கப்பட்டு, வரலாறு படித்து பட்டம் பெற்று, பின் லண்டன் சென்று மருத்துவரான மேரி பூனன் லூக்கோஸின் சாதனைப் பற்றிய பதிவு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்திய மருத்துவ வரலாற்றில் பெண்களுக்கு வழிகாட்டிய முன்னோடிகளில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றவர் டாக்டர்.மேரி பூனன் லூக்கோஸ். மேரி பூனன் லூக்கோஸ் 1886-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அய்மணம் கிராமத்தில் செல்வச் செழிப்பான சிரியக் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை டாக்டர்.டி.ஈ.பூனன், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் மருத்துவப் பட்டதாரியும் அரச குடும்பத்தின் முதன்மை மருத்துவருமாவார்.


