விநாயகா மிஷன்ஸ் சார்பில் 2,500 மரக்கன்றுகள் நடல்
சேலம்; சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை சார்பில், 'சண்முக வனம் - பசுமை இயக்கம் - 2026' பெயரில், 25 லட்சம் மரக்-கன்றுகள் நடும் திட்டத்தில், 2,500 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளை அறங்காவலர் அன்னபூரணி, தலைவர் சரவணன், பல்கலை வேந்தர் கணேசன், துணை தலைவர்கள் சந்திர-சேகர், அனுராதா ஆகியோர் வழிகாட்டுதலின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்-சியை வலியுறுத்தி, முதல் கட்டமாக, 2,500 மரக்-கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. பல்கலை துணைவேந்தர் சுதிர் தலைமை வகித்தார். பதி-வாளர் நாகப்பன் முன்னிலை வகித்தார்.
இந்த மரக்கன்றுகள் நடும் விழா, பல்கலை வளாகம் மற்றும் சேலம், புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் உள்ள பல்கலையின் உறுப்பு கல்-லுாரிகளிலும் நடந்தது.இதில் பல்கலையின் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், அலுவ-லர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர், பணியா-ளர்கள் பங்கேற்றனர்.



