விவசாயிகளை முழுமையாக பாதுகாக்காமல் கை பிசைந்து நிற்கும் தவெக அரசு; இபிஎஸ் விமர்சனம்
சென்னை: அரசு இயந்திரத்தை முறையாக சுழற்ற தெரியாமல் அனுபவமின்மை காரணமாக கை பிசைந்து தவெக அரசு இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கடந்த நான்கு மாதங்களாக கனகச்சிதமாக செய்து வரும் தவெக. கூட்டணி அரசு சொல் ஒன்று, செயல் வேறு என்ற ரீதியில் அனைத்துத் தரப்பு மக்களையும் வஞ்சித்து வருகிறது. உரிய நேரத்தில் காவிரியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததால், குறுவை சாகுபடி முழுமையாக செய்ய முடியாமல், விவசாயிகளின் இன்னலைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு. விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய அரசு
கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சீர்குலைந்துபோன சட்டம்-ஒழுங்கினை சீர்செய்வோம் என்று மார்தட்டிப் பேசிவிட்டு, தறிகெட்டு ஓடும் குதிரையைப் போல், குற்றச் சம்பவங்கள் மேலும் மேலும் பெருகி வரும் நிலையில், செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த பொய்க்கால் அரசு, ஆட்சி இயந்திரத்தை முறையாக சுழற்றத் தெரியாமல், அனுபவமின்மை காரணமாக கை பிசைந்து நிற்கும் இந்த அரசுக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.


