புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்ற சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாயின. இதில் கறவை மாடுகளின் விலை ரூ. 3ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை உயா்ந்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
புன்செய் புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட மாடுகள்.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும். ஈரோடு, கோவை, திருப்பூா் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருவா்.

