மாணவ – மாணவியருக்கு தடகள போட்டிகள்
காஞ்சிபுரம், செப். 7– காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 56வது காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள
காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 56வது காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் மாணவ – மாணவியருக்கு நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில், நேற்று நடந்த ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடக்க விழாவிற்கு, காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்க தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, காஞ்சிபுரம் எஸ்.பி., அரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

