தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அவதி
திருவாலங்காடு: திருவாலங்காடு வழியே தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது காவேரிராஜபுரம் கிராமம். இங்கு, கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலை அருகே உள்ள பட்டா நிலத்தில், சமீபத்தில் அரசு உத்தரவுப்படி கிராவல் மண் எடுக்கும் பணி தொடங்கியது.
தற்போது, சென்னை –-- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணி வேகமெடுத்துள்ளதை அடுத்து, அப்பணிக்காக இங்கு மண் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிராவல் மண் ஏற்றிச்செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் அசுர வேகத்தில் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன.

